/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறையில் 100 போலீசார் சோதனை ஆனா ஒண்ணும் சிக்கவில்லையாம்!
/
சிறையில் 100 போலீசார் சோதனை ஆனா ஒண்ணும் சிக்கவில்லையாம்!
சிறையில் 100 போலீசார் சோதனை ஆனா ஒண்ணும் சிக்கவில்லையாம்!
சிறையில் 100 போலீசார் சோதனை ஆனா ஒண்ணும் சிக்கவில்லையாம்!
ADDED : பிப் 16, 2025 02:56 AM
சேலம்: சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு, மொபைல் போன், புகையிலை உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதால், அடிக்கடி ஆய்வு செய்து, பறிமுதல் செய்யப்படும். தொடர்ந்து அஸ்தம்பட்டி போலீசில் வழக்குப்பதிந்து விசாரித்தாலும், பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதில்லை.
இந்நிலையில் வழக்கம்போல் மத்திய சிறையில், அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் அஸ்வினி, அம்மாபேட்டை உதவி கமிஷனர் செல்வம் தலைமையில், 100 போலீசார், நேற்று காலை, 6:00 மணிக்கு, மத்திய சிறையில் சோதனை நடத்தினர்.அதேபோல் பெண்கள் கிளை சிறையில், 10 போலீசார், சோதனை நடத்தினர். ஒன்றரை மணி நேரம் சோதனை நடந்தது. ஆனால், எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.