/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்
/
விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்
விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்
விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்
ADDED : நவ 24, 2025 04:02 AM
சேலம்,:'விஜயகாந்த் குருபூஜை விழாவில், சேலத்தில் இருந்து, 1,000 பேர் பங்கேற்க வேண்டும்' என, தே.மு.தி.க., மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
சேலம் மாநகர தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் இளங்கோவன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சேலம் மேற்கு, தெற்கு, வடக்கு தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர்., திருத்தம் பணிகளில், தே.மு.தி.க., முகவர்கள் அதிகளவில் பங்கேற்று எந்த ஒரு உண்மையான வாக்காளரின் பெயரும் விடுபட்டு விடாமல் கவனமாக செயல்பட வேண்டும். வரும் நவ.,28ல் தே,மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் 2வது குருபூஜை விழா நடக்கயுள்ளது. இதில் சேலத்தில் இருந்து, 1,000 பேர் பங்கேற்க வேண்டும். அடுத்தாண்டு ஜன.9ல் கடலுாரில் நடக்கயுள்ள மக்கள் உரிமை மீட்பு 2.0 மாநாட்டில், 5,000 பேர் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.