/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று கூட்டுறவு மாதிரி நேர்முக தேர்வு

ADDED : நவ 24, 2025 04:01 AM
சேலம்:கூட்டுறவுத்துறை தேர்வுக்கான மாதிரி நேர்முக தேர்வு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று நடக்கிறது.
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், நேர்முக தேர்வுகள் நடத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி கூட்டுறவுத்துறை தேர்வுக்கான மாதிரி நேர்முக தேர்வு இன்று காலை, 9:30 மணிக்கு இத்துறையில் அனுபவமிக்க மாவட்ட அளவிலான ஒய்வுபெற்ற அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்ற முன்பதிவு செய்யாத மாணவர்களும், காலை, 9:00 மணிக்குள் வேலைவாய்ப்பு மையத்துக்கு நேரடியாக வந்து பதிவு செய்து மாதிரி நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.