/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கியவி.ஏ.ஓ., - உதவியாளர் கைது
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கியவி.ஏ.ஓ., - உதவியாளர் கைது
ADDED : ஏப் 03, 2025 01:29 AM
ரூ.10,000 லஞ்சம் வாங்கியவி.ஏ.ஓ., - உதவியாளர் கைது
ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே செல்லப்பிள்ளைகுட்டையில், வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் ரவிச்சந்திரன், 47. இவரது உதவியாளர் பெருமாள், 50. அதே பகுதியை சேர்ந்த, கட்டட தொழிலாளி ராஜேந்திரன், பட்டா, வாரிசு சான்றிதழ் கேட்டு, வி.ஏ.ஓ.,வை அணுகினார். அதற்கு அவர், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து ராஜேந்திரன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் தெரிவித்தார். அவர்கள் அறிவுரைப்படி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, ராஜேந்திரன், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மாறு வேடத்தில் இருந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரவிச்சந்திரன், பெருமாளை, கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அலுவலகத்தில், இரவு வரை விசாரணை நடத்தினர்.

