ADDED : பிப் 16, 2026 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள ஆனந்தாயி அங்-காள பரமேஸ்வரி, ஆனந்த கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் மாசி உற்சவம் கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நடந்து வந்த விழாவில், நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. செக்கான் கிணற்று தோட்டத்தில், 1,008 பக்தர்கள், பால்-குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக, கோவிலை அடைந்-தனர். தொடர்ந்து அந்த பாலால், அம்மனுக்கு அபிஷேகம் செய்-தனர். பின் நடந்த சிறப்பு பூஜையில் திரளானோர் வழிபட்டனர்.

