/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1,008 லிட்டர் பாலால் ராஜகணபதிக்கு அபிேஷகம்
/
1,008 லிட்டர் பாலால் ராஜகணபதிக்கு அபிேஷகம்
ADDED : செப் 19, 2024 07:41 AM
சேலம்: சேலம், சின்னக்கடை வீதி ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த 7ல் தொடங்கியது. தொடர்ந்து, 11 நாட்கள் கணபதி பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தார். அதன் நிறைவாக நேற்று கோவில் குருக்கள் இணைந்து, காலை முதலே பல்வேறு ேஹாம பூஜையில் ஈடுபட்டனர். பால், இளநீர், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபி ேஷகம் செய்தனர். 1,008 லிட்டர் பாலால் அபிேஷகம், 108 சங்கு அபிேஷகம், 108 கலச அபிேஷகம், நவகலச அபிேஷகம் செய்யப்பட்டன.
விநாயகருக்கு பட்டாடை உடுத்தி பல்வேறு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வண்ண வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. குருக்கள் வேதங்கள் முழங்க விநாயக பெருமானுக்கு, 1,500 கிலோ பூக்களால்
புஷ்பாஞ்சலி அபி ேஷகம் செய்யப்பட்டது. மேள தாளம் முழங்க மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விநாயகரை வணங்கினர். 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை,
கோவில் குருக்கள் செய்திருந்தனர்.

