/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி தொடக்கம்
/
108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி தொடக்கம்
ADDED : ஜன 06, 2024 12:03 PM
சேலம்: சேலம், 3 ரோட்டில் உள்ள வரலட்சுமி மஹாலில், 108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. காலை, 6:00 மணி முதல், பல்வேறு வகை ஹோமங்கள், கோமாதா பூஜை, விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், திருவாராதனம், தீபாராதனை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை, மாலையில் ஊஞ்சல் சேவை, இரவு திருவாராதனம், சயன பூஜை, ஏகாந்த சேவை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனிடையே, 108 பெருமாள் சுவாமி சிலைகள் பூஜை செய்து வைக்கப்பட்டிருந்தன. சிறப்பு பூஜையாக வரும், 10ல் சகஸ்ர கலச அபிஷேகம், 11ல் தோமால சேவை, 14ல் விஷ்ணு சகஸ்ர நாமாவளி ஹோமம், மகா பூர்ணாஹீதி, ராஜ உபசாரம், மகா தீபாராதனை நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சி வரும், 14 வரை நடக்க உள்ள நிலையில், ஒரே இடத்தில் பெருமாளின், 10 நாள் அவதாரத்தை கண்டுகளித்து அருள் பெற, அந்நிகழ்ச்சி குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.