/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடைசி சோமவாரத்தில் 108 சங்காபிஷேக விழா
/
கடைசி சோமவாரத்தில் 108 சங்காபிஷேக விழா
ADDED : ஜன 14, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் மார்கழி மாத கடைசி சோமவாரம், பவுர்ணமியையொட்டி, 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. காலை, 10:00 மணிக்கு சகஸ்ரலிங்க மண்டபத்தில் கலசம் மற்றும் நெல் மீது, 108 சங்குகளால் சிவலிங்கம் போல் அமைத்து அதில் புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து யாகவேள்வி செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து கலசம், சங்கில் நிரப்பிய புனிதநீரால், சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது. ஏராள-மான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

