/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாய்கள் கடித்து 11 ஆட்டுக்குட்டி பலி
/
நாய்கள் கடித்து 11 ஆட்டுக்குட்டி பலி
ADDED : ஜன 05, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் கடித்து 11 ஆட்டுக்குட்டி பலி
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்த ஆசிரியர் காளிமுத்து, 50. இவரது தோட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன், 55, என்பவர், 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை பட்டி வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆட்டுக்குட்டிகளை, பட்டியில் கட்டி விட்டு ஆடுகளை மேய்க்க சென்றார். மதியம், 3:00 மணிக்கு தெரு நாய்கள் கூட்டமாக வந்து, பட்டிக்குள் இருந்த 11 ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறின. இதில், 11 குட்டிகளும் இறந்தன. இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.