/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயி வீட்டில் 11 பவுன் தங்க காசுகள் திருட்டு
/
விவசாயி வீட்டில் 11 பவுன் தங்க காசுகள் திருட்டு
ADDED : செப் 23, 2024 03:23 AM
வீரபாண்டி: விவசாயி வீட்டில் பீரோவை உடைத்து, 11 பவுன் தங்க காசுளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வீரபாண்டி அருகே இனாம் பைரோஜி, காட்டுவளவை சேர்ந்த, விவசாயி சுப்ரமணி, 65. இவர் மனைவி பூபதி, 55, மகன் சண்-முகம், 34, மகள் பூங்கொடி, 32, மருமகள், இரு பேரக்குழந்தைக-ளுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். கடந்த, 20 இரவு, அனைவரும் வீட்டின் முன் பகுதியில் படுத்துள்ளனர். அடுத்த பகுதியில் தறி பட்டறை, சமையற்கூடம் உள்ளது. நேற்று முன்தினம் காலை எழுந்த நிலையில், பட்டறை பகுதியில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதிர்ச்சியடைந்து பார்த்தபோது, அதில் இருந்த, 35 பவுன் நகைகளில், 11 பவுன் தங்க காசுகள் மட்டும் திருடுபோயிருந்தன. பட்டறை பகுதி வெளிப்புற சுவரில் காற்று, வெளிச்சம் வருவ-தற்கு, வட்ட வடிவில் சிறு துளை விடப்பட்டுள்ளது. அந்த வழியே நுழைந்து மர்ம நபர்கள் திருடிச்சென்றிருக்கலாம் என சந்-தேகப்பட்டனர்.
இதுகுறித்து சுப்ரமணி நேற்று அளித்த புகார்படி, ஆட்டையாம்-பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாநகர குற்றப்பிரிவில் இருந்து கைரேகை தடயவியல் துறையினர், மோப்ப நாய் ஜூலியுடன் சம்பவ இடம் வந்து தடயங்களை சேக-ரித்தனர்.