/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி
/
மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி
ADDED : நவ 19, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி அருகே பக்கநாடு, மாதேஸ்வரன்வளைவில், பாவாயி என்பவர் ஆடுகளை வளர்த்துக்கொண்டு விவசாயம் செய்கிறார். அவருக்கு சொந்தமான பட்டியில், நேற்று அதிகாலை மர்ம விலங்கு புகுந்து, 7 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துள்ளது.
தவிர அங்கிருந்த 6 ஆடுகளை காணவில்லை. அருகே குண்டுமலைமண்கரட்டில் பழனிசாமி வளர்ந்து வரும், 11 ஆடுகளை, மர்ம விலங்கு கடித்துள்ளது. இரு இடங்களிலும் சேர்த்து, 11 ஆடுகள் பலியாகின.
வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கால்நடை மருத்துவர்கள் கண்ணன், ராஜேஸ் ஆகியோர், காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

