/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1,113 மூட்டை சர்க்கரை, 1,080 கிலோ வெல்லம் பறிமுதல்
/
1,113 மூட்டை சர்க்கரை, 1,080 கிலோ வெல்லம் பறிமுதல்
1,113 மூட்டை சர்க்கரை, 1,080 கிலோ வெல்லம் பறிமுதல்
1,113 மூட்டை சர்க்கரை, 1,080 கிலோ வெல்லம் பறிமுதல்
ADDED : ஜன 04, 2024 10:17 AM
ஓமலுார்: காமலாபுரம் கரும்பாலை, தனியார் நிறுவனங்களில் இருந்து, 50 கிலோவில், 1,113 சர்க்கரை மூட்டைகள், 1,080 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே காமலாபுரத்தில் உள்ள பல்வேறு ஆலைகளில், வெல்ல தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆலைகளில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் எல்லப்புளியில்
செந்தில்குமார், 38, கரும்பாலையில், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்கு வைத்திருந்த, 63 சர்க்கரை மூட்டைகள்(ஒரு மூட்டை, 50 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த ஆலையில், 1,080 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு உணவு மாதிரி எடுக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு திருநெல்வேலி அனுப்பப்பட்டது. செந்தில்குமாரிடம் விசாரித்ததில், சர்க்கரையை காமலாபுரம் பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து வாங்கியதாக வாக்குமூலம் அளித்தார்.
அதனால் அந்த நிறுவனத்தில் ஆய்வு நடந்தது. அங்கு, 800 சர்க்கரை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அதன் அருகே உள்ள மற்றொரு நிறுவனத்தில் ஆய்வு செய்ததில், 250 சர்க்கரை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த இரு நிறுவனத்தை சேர்ந்த அம்பிகா, 41, முத்துக்குமார், 33 ஆகியோரிடம், கொள்முதல், விற்பனை விபரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து கதிரவன் கூறுகையில், ''விசாரணை முடிவு, உணவு பகுப்பாய்வு முடிவுப்படி நடவடிக்கை இருக்கும். வெல்ல தயாரிப்பின் போது வெள்ளை சர்க்கரை கலப்பது உள்ளிட்ட உணவு பாதுகாப்பு விதிமீறல் கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.