/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூரில் இரு அனல்மின் நிலையங்களில் 1,180 மெகாவாட் மின் உற்பத்தி
/
மேட்டூரில் இரு அனல்மின் நிலையங்களில் 1,180 மெகாவாட் மின் உற்பத்தி
மேட்டூரில் இரு அனல்மின் நிலையங்களில் 1,180 மெகாவாட் மின் உற்பத்தி
மேட்டூரில் இரு அனல்மின் நிலையங்களில் 1,180 மெகாவாட் மின் உற்பத்தி
ADDED : ஏப் 18, 2025 02:16 AM
மேட்டூர்:மேட்டூரில், இரு அனல்மின் நிலையங்களில் நேற்று குறைந்தபட்சம், 1,180 முதல் அதிகபட்சம், 1,230 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட், புது அனல்மின் நிலையத்தில் ஒரே அலகில், 600 மெகாவாட் என, 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். வார விடுமுறை, தமிழ் புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறையால் மின்தேவை குறைந்தது. அதற்கேற்ப மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 1,230 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
விடுமுறை முடிந்து கடந்த, 15 முதல் தமிழக மின்தேவை அதிகரித்தது.அதற்கேற்ப, 15 காலை புது அனல்மின் நிலையத்தில், 550 முதல், 600 மெகாவாட், பழைய அனல்மின் நிலையத்தில், 1,2 அலகுகளில், 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. நேற்று தமிழகத்தில் வெயில் அதிகரித்த நிலையில் மின்தேவை, 16,842 மெகாவாட் ஆக இருந்தது. அதற்கேற்ப, மேட்டூர் புது அனல்மின் நிலையத்தில், 550 முதல், 600 மெகாவாட், பழைய அனல்மின்நிலையங்களில், 1,2,4வது அலகில் தலா, 210 வீதம், 630 மெகாவாட் என, 1,180 முதல், 1,230 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

