/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் 11வது சர்வதேச காபி தின கலந்துரையாடல்
/
ஏற்காட்டில் 11வது சர்வதேச காபி தின கலந்துரையாடல்
ADDED : அக் 07, 2025 02:00 AM
ஏற்காடு, ஏற்காட்டில், காபி வாரியத்தின் 11வது சர்வ
தேச காபி தினத்தை முன்னிட்டு போடிநாயக்கனுார் துணை இயக்குனர் தங்கராஜ் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
காபி வாரிய இணை இயக்குனர் கருத்தமணி வரவேற்றார். பெங்களூரு காபி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் குர்மா ராவ் கலந்து கொண்டார். ஏற்காடு, கொல்லிமலை, வத்தலகுண்டு, பச்சை மலை, கல்வராயன் மலை, கருமந்துறை பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட காபி விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், 2026 முதல் 2030 வரை, 16 வது ஐந்தாண்டு திட்டத்திற்கான கருத்துக்கள் கேட்கப்பட்டது.
காபி வாரிய தலைமை நிர்வாக அதிகாரி குர்மா ராவ் பேசுகையில்,''சேர்வராயன் மலையில் விளையும் காபிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
காபி வாரியத்தில் களப்பணியாளர்கள் பற்றாக்குறை காரணத்தால், விவசாயிகள் காபி கிரிஷ்ஷி தரங்கா மற்றும் இந்திய காப்பி செயலியில் பதிவு செய்து தேவையான ஆலோசனைகளை பெறலாம். நவ., 6 முதல் 8 வரை மூன்று நாட்கள், பெங்களூருவில் நடைபெறும் நுாற்றாண்டு விழாவில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
பல்வேறு தோட்ட உரிமையாளர்கள், காபி வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்ததும், காபி தின பேரணி நடந்தது.