/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1,230 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
/
1,230 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
ADDED : டிச 14, 2025 05:45 AM
மேட்டூர்: மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில், ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட், புது அனல்மின் நிலை-யத்தில், 600 மெகாவாட் என, 1,440 மெகாவாட் மின்சாரம் உற்-பத்தி செய்யப்படும். இரு நாட்களுக்கு முன், தொழில்நுட்ப கோளாறால், புது அனல்மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது.
ஏற்கனவே பழைய அனல்மின் நிலையம், 3வது அலகில், கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, புதுப்பிப்பு பணி நடக்கிறது.இந்நிலையில் நேற்று முன்தினம், 2வது அலகு, நேற்று ஒன்றா-வது அலகில், கொதிகலன் குழாய் பழுதால் மின் உற்பத்தி பாதிக்-கப்பட்டது. இதனால், 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய மேட்டூர் அனல்மின் நிலையங்களில், நேற்று மாலை, 4வது அலகில் மட்டும், 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. 1,230 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

