/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்.டி.ஓ., ஆபீசில் ரெய்டு ரூ.1.26 லட்சம் சிக்கியது
/
ஆர்.டி.ஓ., ஆபீசில் ரெய்டு ரூ.1.26 லட்சம் சிக்கியது
ஆர்.டி.ஓ., ஆபீசில் ரெய்டு ரூ.1.26 லட்சம் சிக்கியது
ஆர்.டி.ஓ., ஆபீசில் ரெய்டு ரூ.1.26 லட்சம் சிக்கியது
ADDED : செப் 24, 2024 10:27 PM
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீசார் அலுவலக வழிப்பாதை, வெளிப்புற பகுதிகளை பூட்டிவிட்டு சோதனை நடத்தினர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதியின் 'ரெனால்டு - டஸ்டர்' கார், அலுவலகம் வளாக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணியாளர்களின் மொபட், பைக் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
ஆர்.ஓ., வாட்டர் பேட்டரிகளின் மேற்புற பெட்டிகள் மீது பணக்கட்டுகளும் மற்றும் வளாக பகுதியில், சிதறிய நிலையில் கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் கிடந்தன.
மொத்தம் ஒரு லட்சத்து 26,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பணம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலக பணியாளர்களிடம் விசாரித்தனர். மாலை 4:00 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9:00 மணி வரை தொடர்ந்தது.