ADDED : மார் 29, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி அருகே
மண்மலை ஊராட்சி வடக்குப்பட்டியில், செந்தாரப்பட்டியை சேர்ந்த
பெண்கள், நேற்று மரவள்ளி கிழங்கு தோட்டத்துக்கு கூலி வேலைக்கு
சென்றனர். பணி முடிந்து, மாலை, 4:00 மணிக்கு மினி சரக்கு வேனில் வீடு
திரும்பிக்கொண்டிருந்தனர். வேனை, அதே பகுதியை சேர்ந்த, டிரைவர்
ராஜேந்திரன், 40, ஓட்டினார்.
செந்தாரப்பட்டியில் சென்றபோது,
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் கவிழ்ந்தது. இதில்
வேனில் சென்ற, 13 பேரும் காயமடைந்து தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார
நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 6 பேர் மேல்சிகிச்சைக்கு
ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில்,
பொன்னம்மாள், 65, ஆண்டாள், 60, ஆகியோர், சேலம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

