sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் மாவட்டத்தில் 45 அரசு உள்பட 130 பள்ளிகள் 'சதம்'

/

சேலம் மாவட்டத்தில் 45 அரசு உள்பட 130 பள்ளிகள் 'சதம்'

சேலம் மாவட்டத்தில் 45 அரசு உள்பட 130 பள்ளிகள் 'சதம்'

சேலம் மாவட்டத்தில் 45 அரசு உள்பட 130 பள்ளிகள் 'சதம்'


ADDED : மே 17, 2025 01:28 AM

Google News

ADDED : மே 17, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சேலம் மாவட்டத்தில், 45 அரசு பள்ளிகள் உள்பட, 130 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அந்த பள்ளிகள் விபரம் வருமாறு:

அரசு பள்ளிகள்

சேலம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி; காடையாம்பட்டி மாதிரிப்பள்ளி; சேலம் காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளி; கொடுங்கல் மலைவாழ் உறைவிடப்பள்ளி; ஏற்காடு ஏகலைவா மாதிரி உறைவிட மேல்நிலைப்பள்ளி; மகுடஞ்

சாவடி அரசு மகளிர் மேல்

நிலைப்பள்ளி;

செட்டியூர்; கன்னியம்பட்டி; கோரணம்பட்டி; நெடுங்குளம்; செக்கானுார்; சாணாரப்பட்டி; மூலக்காடு; எம்.ஓலைப்பட்டி; வளையசெட்டிப்பட்டி; கீரைபாப்பம்பாடி; பெரியபுதுார்; பூலாவரி; கன்னந்தேரி; மூக்கனுார்; ராமன்பட்டி; கொத்தாம்பாடி; சிக்கனம்பட்டி; ஆறகளூர்; கல்லாநத்தம்; கொட்டவாடி; நாவக்குறிச்சி; புத்துார்; கோவிந்தம்பாளையம்; லத்துவாடி; சித்தேரி; தாதனுார்; வடசென்னிமலை; தவளப்பட்டி; ஆச்சாங்குட்டப்பட்டி; அத்தனுார்பட்டி; ராமலிங்கபுரம்; விளாரிபாளையம்; மாசிநாயக்கன்பட்டி; நிலவாரப்பட்டி; பரநாட்டாமங்கலம்; ஓடைகாட்டுபுதுார்; பகுடுப்பட்டு; பெரியகுட்டிமடுவு; ஏற்காடு செம்மநத்தம் ஆகிய அரசு உயர்நிலை பள்ளிகள்.

அரசு உதவி பெறும் பள்ளி

சேலம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ., ேஹாபார்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி.

சுயநிதி பள்ளிகள்

ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன்; புனித அன்னை பெண்கள் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி; கொங்கணாபுரம் ஏ.ஜி.என்.,; மொரசம்பட்டி அமலா.

மேட்டூர், மாதையன்குட்டை எம்.ஏ.எம்.,; கொளத்துார் மான்போர்ட்; கொளத்துார் ஜே.பி.,; ஜலகண்டாபுரம், காட்டம்பட்டி மினர்வா; ஜலகண்டாபுரம் ஸ்ரீநாச்சியார்; வனவாசி ஸ்ரீசக்தி; வெள்ளாண்டிவலசு செயின்ட் மேரீஸ்; கருங்கல்லுார் விவேகானந்தா கல்வி நிலையம்; மலையாடிப்பட்டி ஸ்ரீவித்யாபாரதி; பொட்டனேரி ஸ்ரீராம் வித்யாலயா;

ரங்கம்பாளையம் சி.எம்.,; மேட்டூர் பாரதி நகர் நாளந்தா;

சங்ககிரி ஆகாஷ் வித்யாபவன்; சங்ககிரி பி.எஸ்.ஜி.,; வைகுந்தம் ஸ்ரீ அம்மன்; தேவூர் பிருந்தாவன்; வடுகப்பட்டி பி.எஸ்.எப்.,; செலவடை ஸ்ரீவித்யாமந்திர்; கன்னந்தேரி விநாயகா; பனிக்கனுார் ஸ்ரீவாரி;

இளம்பிள்ளை ஜோதி வித்யாலயா; ஆட்டையாம்பட்டி விவேகானந்தா பாலமந்திர்; பெருமாம்பட்டி சாலோம் கான்வென்ட்; தாரமங்கலம் செயின்ட் சார்லஸ்; எட்டைக்குட்டைமேடு ஸ்டான்போர்டு; வி.கொங்காரப்பட்டி செயின்ட் ஏஞ்சலா; நாகிசெட்டிப்பட்டி ஸ்ரீவித்யாசாகர்; சிறுவாச்சூர் பாரதி வித்யாலயா; ராஜ்; ஈச்சம்பட்டி ராசி;

நரசிங்கபுரம் ஸ்ரீஎஸ்.ஆர்.வி.,; ஸ்ரீசாரதா நினைவு; விநாயகபுரம் டி.எஸ்.பி.,; சித்தேரி பாரதி வித்யாமந்திர்; ஆத்துார் பாரதியார்; தம்மம்பட்டி லக்கி; கூடமலை நியூ இந்தியா; கருமந்துறை பிரபாவதி; முல்லைவாடி சரஸ்வதி; உலிபுரம் சரஸ்வதி;

இலுப்பநத்தம் ஸ்ரீராமகிருஷ்ணா; தும்பல் செயின்ட் மைக்கேல்; வீரகனுார் சுவாமி விவேகானந்தா; செந்தாரப்பட்டி சுவாமி விவேகானந்தா வித்யாலயா; நாவக்குறிச்சி நேரு; தம்மம்பட்டி ஏ.ஐ.எம்.,; கூடமலை ஸ்ரீவித்யவிகாஸ்; ஏத்தாப்பூர் வித்யா வித்யாலயா; அபிநயம் வைத்தியகவுண்டன்புதுார் ஸ்ரீஅமித் வித்யாலயா; பி.எம்.எஸ்.,;

பேர்லண்ட்ஸ் ேஹாலி ஏஞ்சல்ஸ்; பழனியாபுரம் ஸ்ரீகோகுலம்; கவர்கல்பட்டி ேஹாலி சில்ரன்; எல்.இ.எப்., ஈடன் கார்டன்; பொன்னம்மாபேட்டை நியூ இந்தியா டிஸ்கவரி; வாழப்பாடி சரஸ்வதி; ஸ்ரீவாசவி; தியாகராஜர்; சேஷன்சாவடி கலைமகள் வித்யாமந்திர்; கிச்சிப்பாளையம் ஜெய்;

ராமநாயக்கன்பாளையம் ஆத்துார் பப்ளிக்; மணிவிழுந்தான் தெற்கு மாருதி; ஓமலுார் பாத்திமா; சங்ககிரி ஸ்ரீகொங்கு; சில்வர் லைன்ஸ்; வெள்ளக்கல்பட்டி கோல்டன் ஸ்பார்க்; காமலாபுரம் ஜான்பிரிட்டோ; வெள்ளக்கல்பட்டி கொங்கு; பஞ்சுகாளிப்பட்டி சவுத் இந்தியன்; தொளசம்பட்டி ஸ்ரீதுளசிவிகாஸ்;

பனமரத்துப்பட்டி கிறிஸ்டோபர்; சன்னியாசிகுண்டு செங்குந்தர்; நெய்காரப்பட்டி ஸ்ரீவித்யாபாரதி; சோளம்பள்ளம் சின்மயா வித்யாலயா; மல்லமூப்பம்பட்டி ஸ்ரீபழனியப்பா; சூரமங்கலம் செயின்ட் ஜான்ஸ்; சன்னியாசிகுண்டு செயின்ட் தாமஸ், கந்தம்பட்டி ஈக்விடாஸ்குருகுலம்; தளவாய்பட்டி ஸ்ரீகாயத்ரி; ஏற்காடு மான்போர்ட் கம்யூனிட்டி பள்ளி.

92.17 சதவீதம் தேர்ச்சி

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. அதில் சேலம் மாவட்டத்தில், 523 பள்ளிகளில், 40,709 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவியர், 20,177; மாணவர்கள், 20,532 பேர். அவர்களில், 37,520 பேர் வெற்றி பெற்றனர். இது, 92.17 சதவீதம். வெற்றி பெற்ற மாணவியர், 19,060 பேர். இது, 94.46 சதவீதம். மாணவர்கள், 18,460 பேர். இது, 89.91 சதவீதம். மாணவர்களை விட, கூடுதலாக, 4.55 சதவீத மாணவியர் வெற்றி

பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட, 0.42 சதவீதம் கூடுதல் தேர்ச்சி.

மாணவியர் அதிகம்

மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதியவர்கள், 23,798 பேர். அவர்களில் மாணவியர், 12,420; மாணவர்கள், 11,378 பேர். வெற்றி பெற்றவர்கள், 21,339 பேர். இது, 89.65 சதவீதம். மாணவியர் தேர்ச்சி, 11,473. இது, 92.38 சதவீதம். மாணவர்கள் தேர்ச்சி, 9,863 பேர். இது 86.68 சதவீதம். மாணவர்களை விட, கூடுதலாக, 5.70 சதவீத மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.

சமூக அறிவியலில் 917 பேர் 'சதம்'

சுயநிதி பள்ளிகளில் பாட வாரியாக, 100 சதவீதம் தேர்ச்சியில், 968 பேர் சாதனை படைத்துள்ளனர். அதன்படி ஆங்கிலத்தில், 4 பேர், கணிதத்தில், 51 பேர், சமூக அறிவியலில், 575 பேர், அறிவியலில், 338 பேர், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் கணிதத்தில், 20 பேர், சமூக அறிவியலில், 342 பேர், அறிவியலில், 68 பேர் என, 430 பேர், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us