/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1,300 கிலோ புகையிலை கடத்திய7 பேர் கைது; 3 வாகனங்கள் பறிமுதல்
/
1,300 கிலோ புகையிலை கடத்திய7 பேர் கைது; 3 வாகனங்கள் பறிமுதல்
1,300 கிலோ புகையிலை கடத்திய7 பேர் கைது; 3 வாகனங்கள் பறிமுதல்
1,300 கிலோ புகையிலை கடத்திய7 பேர் கைது; 3 வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஏப் 03, 2025 01:51 AM
1,300 கிலோ புகையிலை கடத்திய7 பேர் கைது; 3 வாகனங்கள் பறிமுதல்
சேலம்:சேலம் டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலைமையில் போலீசார், செவ்வாய்ப்பேட்டை, சி.எஸ்.ஐ., பள்ளி அருகே, நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நிறத்தில் மாருதி இகோ வேன், ஹூண்டாய் வென்யூ கார் அடுத்தடுத்து வர, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். வேன், காரில், மூட்டை மூட்டையாக ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இரு வாகனங்களில் வந்தவர்களை, செவ்வாய்ப்பேட்டை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த லிங்கராஜ், 40, வெங்கடேஷ், 40, முத்துக்குமார், 33, சேலம், மெய்யனுார் மோகன், 47, ஜாகீர்ரெட்டிப்பட்டி சுல்தான்கான், 25, ஓமலுார் அகத், 51, பெங்களூரு சம்பலால், 28, என தெரிந்தது. 7 பேரையும் கைது செய்த போலீசார் காரில் கடத்தி வந்த, 11 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,300 கிலோ புகையிலை பொருட்கள், 2 வேன், 1 காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது.