/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1.4 கிலோ கஞ்சா பறிமுதல் விற்பனையாளர் சிக்கினார்
/
1.4 கிலோ கஞ்சா பறிமுதல் விற்பனையாளர் சிக்கினார்
ADDED : ஜூலை 28, 2025 03:50 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, அங்குள்ள அந்தேரிப்பட்டியில் ஒரு வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ
வில் சோதனை நடத்தினர். அதில், 80 பொட்டலங்களில், 1.4 கிலோ கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு, 14,000 ரூபாய். விசாரணையில் ஆட்டோ உரிமையாளர் பாபு மகன் சையத்பாஷா, 25, விற்பனைக்கு பதுக்கி வைத்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன் அங்குள்ள கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், 54, கஞ்சா வினியோகித்ததும், 17 வயது சிறுவன் மூலம் விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதனால் ஆட்டோவுடன் கஞ்சா, கடத்தலுக்கு பயன்
படுத்திய பைக், மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், சிறுவன் உள்பட, 3 பேரையும் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'பிரகாஷ் மீது ஏற்கனவே கஞ்சா விற்றது தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக குண்டாசிலும் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வந்த அவர், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, தற்போது மீண்டும்
சிக்கியுள்ளார்' என்றனர்.

