/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
ADDED : நவ 20, 2025 02:08 AM
சேலம்: சென்னையை சேர்ந்த, டிரைவர் மூவேந்தர். இவர், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கோவைக்கு, தனியார் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
நேற்று காலை 6:30 மணிக்கு, சேலம், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் வந்தபோது, அங்கு, 'பேரிகார்டு'கள் வைக்கப்பட்டு, வாகனங்கள் அணுகு சாலையில் திருப்பி விடப்பட்டு இருந்தன.
ஆனால் மூவேந்தர் நேராக சென்று பேரிகார்டில் மோத, கட்டுப்பாட்டை இழந்த பஸ், தொடர்ந்து சென்டர் மீடியனில் மோதி, எதிரே உள்ள சாலையில் கவிழ்ந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கிய மூவேந்தர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அங்கிருந்தோர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

