/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
150 அடி பள்ளத்தில் விழுந்த லாரிசாதுரியமாக தப்பிய டிரைவர்
/
150 அடி பள்ளத்தில் விழுந்த லாரிசாதுரியமாக தப்பிய டிரைவர்
150 அடி பள்ளத்தில் விழுந்த லாரிசாதுரியமாக தப்பிய டிரைவர்
150 அடி பள்ளத்தில் விழுந்த லாரிசாதுரியமாக தப்பிய டிரைவர்
ADDED : மார் 16, 2025 02:17 AM
150 அடி பள்ளத்தில் விழுந்த லாரிசாதுரியமாக தப்பிய டிரைவர்
ஏற்காடு:சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 23. இவர் நேற்று மதியம், 3:00 மணிக்கு, சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு, கட்டடம் கட்டும் ஜல்லி கற்களை, மினி லாரியில் ஏற்றி சென்றுகொண்டிருந்தார். மலைப்பாதை, 40 அடி பாலம் அருகே சென்றபோது, எதிரே ஒரு வாகனம் வர, அதற்கு வழிவிட, ஈஸ்வரன், லாரியை இடது புறமாக சாலையோரம் திருப்பினார். அப்போது அவரது
கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓர தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு, உருண்டோடி, 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. டிரைவர், சாதுரியமாக முன்கூட்டியே குதித்து, காயத்துடன் தப்பினார். அவரை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மற்றொரு விபத்துஅதேபோல் வாழப்பாடி, முத்தம்பட்டி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரியின் பின்புற டயர் வெடித்து, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் சேலத்தில் இருந்து கரியகோவில் நோக்கி, இடைப்பட்டி
புதுாரை சேர்ந்த சக்திவேல், 38, ஓட்டி வந்த தனியார் பஸ், மினி லாரி பின்புறம் மோதியது. பஸ்சில் வந்த சிலர், லேசான காயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.