/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
150 லிட்டர் சாராய ஊறல்; பாலமலையில் பறிமுதல்
/
150 லிட்டர் சாராய ஊறல்; பாலமலையில் பறிமுதல்
ADDED : பிப் 10, 2025 07:31 AM
மேட்டூர்: சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., சென்னகேசவன், கொளத்துார் போலீசார் நேற்று காலை பாலமலையில், 3 பிரிவுகளாக சென்றனர். அங்கு நடத்திய சோதனையில், ராமன்பட்டி அடுத்த கெம்மம்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன், 57, இரு பேரல்களில் பதுக்கி வைத்திருந்த, 150 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து, ஈஸ்வரனை கைது செய்தனர்.
மது விற்ற 4 பேர்
அதேபோல் மேட்டூர், மாதையன்குட்டை, குண்டுக்கல்லுாரை சேர்ந்தவர் மாரியம்மாள், 62, பிரகாஷ், 36, ஆகியோர் முறையே, தலா, 10, 24 குவார்ட்டர் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். இதனால் மேட்டூர் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர். மேலும் ஆத்துார் டவுன் போலீசார் நேற்று, தாண்டவராயபுரத்தில், 'ரோந்து' பணியில் ஈடுபட்டபோது, வீடு அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற சரோஜா, 60, பூங்கொடி, 52, ஆகியோரை கைது செய்து, 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

