/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
21,607 யுனிட் ரத்தம் வழங்கல் 150 அமைப்புகளுக்கு பாராட்டு
/
21,607 யுனிட் ரத்தம் வழங்கல் 150 அமைப்புகளுக்கு பாராட்டு
21,607 யுனிட் ரத்தம் வழங்கல் 150 அமைப்புகளுக்கு பாராட்டு
21,607 யுனிட் ரத்தம் வழங்கல் 150 அமைப்புகளுக்கு பாராட்டு
ADDED : டிச 28, 2024 02:24 AM
சேலம்: சேலத்தில், தன்னார்வ ரத்த கொடையாளிகள் சார்பில், 2023ம் ஆண்டில், 95 முகாம்கள் நடத்தப்பட்டன. அத்துடன் சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கியிலும், ரத்த தானம் பெறப்பட்டன. இதன்மூலம், 21,607 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களில், 1,091 பேர் பெண்கள். கல்லுாரிகள், ரசிகர் மன்றம், வழிபாட்டு மன்றம், தனியார் வங்கிகள் என, 150 அமைப்புகள் மூலம், 21,607 யுனிட் ரத்தம் பெறப்பட்டது.
இதனால் ரத்தக்கொடை வழங்கிய அமைப்புகளுக்கு பாராட்டு விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை டீன் தேவிமீனாள் தலைமை வகித்து, 150 அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், மருத்து-வமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், ரத்த வங்கி அலுவலர் ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.