/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சண்முகா மருத்துவமனையில்1,500 இதய சிகிச்சை நிறைவு
/
சண்முகா மருத்துவமனையில்1,500 இதய சிகிச்சை நிறைவு
ADDED : டிச 01, 2025 03:25 AM
சேலம்:சேலம் சண்முகா மருத்துவமனை, நவீன கேத் லேப் பிரிவில், 1,500 இதய சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இச்சாதனையை முன்னிட்டு, மேலாண் இயக்குனர் பன்னீர்செல்வம், முதன்மை அதிகாரி பிரபு சங்கர், நிர்வாக அதிகாரி டாக்டர் பிரியதர்ஷினி, இதய நிபுணர் அருண்குமார், குடல், கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் அருண்ராஜ் ஆகியோருடன் மருத்துவக்குழுவினர், பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து பிரபுசங்கர் கூறுகையில், ''ஆன்ஜியோக்ராம், அஞ்சியோபிளாஸ்ட்டி, பேஸ் மேக்கர் உள்ளிட்ட உயர்தர சிகிச்சைகள், ஐவஸ் தொழில்நுட்பம் கொண்ட கேத் லேப் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். அவசர கால இருதய சிகிச்சைகளுக்கு முன்னோடியாக சண்முகா மருத்துவமனை திகழும்,'' என்றார்.

