தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 15ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 15ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 15ம் ஆண்டு விழா கொண்டாட்டம்


ADDED : மார் 21, 2024 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில், 15ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நாலெட்ஜ் கல்லுாரி அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் குமாரசாமி, பொருளாளர் சுரேஷ்குமார் பேசினர்.

சென்னை மல்டி கோர் வேர் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையின் தலைமை அதிகாரி சசிகாந்த் ஜெயராமன்; சேலம் தங்கம் வோல்டு பள்ளி தலைவர் திருநாவுக்கரசு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

முதல்வர் சீனிவாசன், கல்லுாரி ஆண்டறிக்கையை வாசித்தார். மேலாண் துறையின் இயக்குனர் ஸ்டீபன், மேலாண் துறை மாணவர்களின் சாதனைகளை பேசினார். கல்லுாரி துணை முதல்வர் விசாகவேல், ஆசிரியர்கள், மாணவர்களின் சாதனைகளை தொகுத்து வழங்கினார்.

கடந்த கல்வி ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பின் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் நாலெட்ஜ் அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குனர்கள், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us