/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
16 வீடுகள் சேதம்; 150 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
/
16 வீடுகள் சேதம்; 150 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
ADDED : டிச 04, 2024 07:00 AM
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் மழையால், திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர், அதன் ராஜவாய்க்காலிலும் பாய்ந்தோடுகிறது. குறிப்பாக கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் தண்ணீர் தேங்கி, 5 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், புத்துார் அக்ரஹாரத்தில் உள்ள ராஜவாய்க்காலின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, வெளியேறிய மழைநீர், அதை சுற்றியுள்ள விளை நிலங்களில் புகுந்தது. இதனால் பயிரிடப்பட்டிருந்த நெல், சோளம், பருத்தி உள்ளிட்டவை மூழ்கிவிட்டன. கரும்பு, பாக்கு தோட்டங்களிலும் மழைநீர் தேங்கி, 150 ஏக்கர் பயிர்கள் சேதமாகி விட்டன.
அங்குள்ள அரவிந்த் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து சேதமானது. அதேபோல் நாட்டாமங்கலத்தில் வசந்தா, ஆத்துார், அம்மாபாளையத்தில் செல்லம்மாள், ராமநாயக்கன்பாளையத்தில் பரமசிவம், வாழப்பாடி, சிங்கிபுரத்தில் நதியா, சந்திரபிள்ளைவலசில் தமிழ்செல்வி, மேட்டூர் நவப்பட்டியில் குப்புசாமி, ஓமலுார் காமலாபுரத்தில் சவரியம்மாள் ஆகியோரது ஓட்டு வீடுகள், பெத்தநாயக்கன்பாளையம் சின்னமசமுத்திரத்தில் ராமாயி, கெங்கவல்லி அருகே வீரகனுாரில் அண்ணாதுரை ஆகியோரது கூரை வீடுகள், ஆணையம்பட்டியில் காதர்பாட்ஷாவின் அட்டை வீடு உள்பட, 16 வீடுகள் மழையால் இடிந்து சேதமாகின. தவிர சின்னகல்வராயன் மலையில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பசுமாடு இறந்துவிட்டது.