ADDED : ஆக 21, 2026 01:01 AM
சேலம்: இந்திய தோல் மருத்துவர்கள், பால்வினை நோய் மருத்துவர்கள் மற்றும் தொழுநோய் மருத்துவர்கள் சங்கம்(ஐ.ஏ.டி.வி.எல்.,) சார்பில், தமிழக கிளையின், 16-வது மாநில மாநாடு, சேலத்தில் நடந்தது. தமிழக கிளை தலைவர் கவியரசன் தலைமை வகித்தார். விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை முதல்வர் எழில்வேந்தன் தொடங்கி வைத்தார்.
அன்னபூர்ணா மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை முதல்வர் உஷா, தோல் மருத்துவத்துறையில் வேகமாக உருவாகி வரும் புதிய போக்குகள் மற்றும் நவீன மருத்துவ முன்னேற்றங்-களை தொடர்ந்து அறிந்து, அவற்றை மருத்துவ நடைமுறையில் திறம்பட பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். தமி-ழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 1,000-க்கும் மேற்பட்ட தோல் மருத்துவர்கள், முதுநிலை மருத்-துவ மாணவர்கள், மருத்துவ துறை வல்லுனர்கள் பங்கேற்றனர். மருத்துவர்களில், ஒருங்கிணைப்பு தலைவராக கண்ணன், செய-லராக பிரசன்னபாபு, பொருளாளராக நவகுமார், அறிவியல் குழு தலைவராக சீதாலட்சுமி, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், பயில-ரங்க தலைவராக ரேவதி செயல்பட்டனர்.
