ADDED : ஆக 21, 2026 01:02 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்: தலைவசல், வெள்ளையூரை சேர்ந்த, கூலித்தொழிலாளி செல்வ-குமார், 29. இவரது குழந்தைகள், தெருவில் விளையாடிக்கொண்-டிருந்தபோது, அதே ஊரைச்சேர்ந்த தொழிலாளி ரவிக்குமார், பைக்கில் அதிவேகமாக சென்றார். இதுகுறித்து செல்வகுமார் கேட்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திர-மடைந்த ரவிக்குமார், வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, செல்வக்குமாரை குத்தியுள்ளார்.
தடுக்க முயன்ற அவரது மனைவி தனலட்சுமியையும் கத்தியால் குத்தியுள்ளார். தம்பதியர் காயமடைந்து, ஆத்துார் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்டனர். செல்வகுமார் புகாரில், வீர-கனுார் போலீசார், ரவிக்குமாரை நேற்று கைது செய்தனர்.
