sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

17 புது பஸ்கள் இயக்கம்: அமைச்சர் துவக்கிவைப்பு

/

17 புது பஸ்கள் இயக்கம்: அமைச்சர் துவக்கிவைப்பு

17 புது பஸ்கள் இயக்கம்: அமைச்சர் துவக்கிவைப்பு

17 புது பஸ்கள் இயக்கம்: அமைச்சர் துவக்கிவைப்பு


ADDED : டிச 08, 2024 04:04 AM

Google News

ADDED : டிச 08, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, பி.எஸ்., 6 வகையை சேர்ந்த, 17 புது பஸ்கள் இயக்கத்தின் துவக்க விழா நேற்று நடந்-தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து, பஸ் சேவைகளை கொடியசைத்து இயக்கிவைத்தார். அதன்படி சேலம் - பெங்களூருக்கு, 13 பஸ்கள், சேலம் - சென்னைக்கு, 2, ஏற்காட்டில் இருந்து சென்னை, மதுரைக்கு தலா ஒன்று என, 17 பஸ்கள், சேலம் கோட்டம் சார்பில் அடுத்தடுத்து இயக்கிவைக்கப்-பட்டன.

தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது: சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பனமரத்துப்பட்டி வழியே மஞ்சபா-ளிக்கும், சின்னதிருப்பதி பெருமாள் கோவில் வழியே சேலம் ஜங்ஷன், பூமிநாயக்கன்பட்டி வழியே முத்துநாயக்கன்பட்டி, ஆத்-துாரில் இருந்து களரம்பட்டி வழியே கோபாலபுரம் என, 6 புது தடங்களில் டவுன் பஸ்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளன.தவிர தாரமங்கலம் கிளையில் இருந்து வேடப்பட்டி, பெரியேரிப்-பட்டி; இடைப்பாடி கிளையில் இருந்து ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி; வாழப்பாடியில் இருந்து அருநுாற்றுமலை, திம்மநாயக்கன்பட்டி; தலைவாசலில் இருந்து நாவக்குறிச்சி வழியே ஆத்துார்; ஆத்துாரில் இருந்து லத்துவாடி வழியே கவர்-பண்ணை; லத்துவாடி வழியே நெற்குணம் ஆகிய தடங்களில் டவுன் பஸ்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., அருள் உள்பட பலர் உடனி-ருந்தனர்.






      Dinamalar
      Follow us