/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாதனை முயற்சியாக 'நடராஜர்' வடிவத்தில் 1,700 கலைஞர்கள் நடனம்
/
சாதனை முயற்சியாக 'நடராஜர்' வடிவத்தில் 1,700 கலைஞர்கள் நடனம்
சாதனை முயற்சியாக 'நடராஜர்' வடிவத்தில் 1,700 கலைஞர்கள் நடனம்
சாதனை முயற்சியாக 'நடராஜர்' வடிவத்தில் 1,700 கலைஞர்கள் நடனம்
ADDED : ஜூலை 07, 2025 03:54 AM
சேலம்: சேலத்தில் உள்ள, தனியார் நாட்டியப்பள்ளி சார்பில், உடையாப்-பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில், 'நடராஜ நர்த்தனம் 2025' தலைப்பில், உலக சாதனை முயற்சி, நேற்று முன்தினம் நடந்தது.
அதில், நடன கலைஞர்கள் ஒன்றிணைந்து, 'நடராஜர்' வடிவத்தில் நின்றபடி, தொடர்ந்து, 27 நிமிடங்கள் சிவன் பாடல்களுக்கு ஆடி அசத்தினர். இதில், 5 முதல், 55 வயது வரையுள்ள, 1,700 பரத-நாட்டிய கலைஞர்கள், பல வண்ண உடைகளில் ராகம், தாளத்-துக்கு ஏற்ப, ஒரே நேர்கோட்டில் நடனம் ஆட, பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதன்மூலம், 'எதிர்கால தலைமுறைக்கு பரதநாட்டியத்தின் பெருமை தெரியும். அவர்களும் இதை கற்று இன்னும் பல நுாறு ஆண்டுக்கு கொண்டு செல்வர்' என, நிகழ்ச்சி ஏற்பாட்டா-ளர்கள் தெரிவித்தனர்.