ADDED : ஏப் 29, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:
திருப்பூருக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்ற, மத்தியபிரதேச வாலிபரை, ஓமலுார் போலீசார் கைது செய்தனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், ஓங்கால்பன மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்சந்த் மகன் கிருஷ்ணாஅம்ரோல், 36. இவர் கடந்த சில மாதங்களாக, திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விட்டு, நேற்று ஓமலுார் பஸ் நிலையம் வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஓமலுார் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பையில், 18 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூருக்கு கஞ்சா கொண்டு செல்வதாக போலீசில், கிருஷ்ணாஅம்ரோல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, கிருஷ்ணாஅம்ரோலை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.