ADDED : மே 12, 2025 02:49 AM
சங்ககிரி: சங்ககிரி நகராட்சி பகுதியில் நேற்று சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள், வீடுகள் முன் நின்றிருந்தவர்கள் என, 20க்கும் மேற்-பட்டோரை, ஒரு வெறி நாய் கடித்தது.
இதில் பாதிக்கப்பட்ட, சங்ககிரி நகராட்சி துப்புரவு மேற்பார்வை-யாளர் அழகப்பன், 55, குண்டாச்சிகாடு விஜயகுமார், 47, டி.பி., சாலை பழனிசாமி, 52, தங்கம்மாள், 80, சின்னதம்பி, 55, ஓ.ராம-சாமி நகர், ஓய்வு எஸ்.ஐ., சின்னண்ணன், 65, மத்தாளி காலனி சவீனா, 10, ஸ்ரீனிவாசன், 55, மட்டம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகர் பெருமாள், 44, சரவணா தியேட்டர் சாலை செல்வகுமார், 43, கலியனுார் சுப்ரமணியன், 65, பழைய இடைப்பாடி சாலை சரோஜா, 88, தேவண்ணகவுண்டனுார், மணக்காடு புதுார் செங்-கோடன், 75, கோட்டைத்தெரு ராஜேஸ்வரி, 63, மேட்டுக்கடை அன்னபூரணி, 40, சேலம், அம்மாபேட்டை குமார், 57, கோட்-டைத்தெரு தனுஷ்ராஜ், 21, சாய் கார்டன் சண்முகபிரபு, 53, என, 18 பேர், சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டனர். அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தனி அறை ஒதுக்கீடு செய்து, தடுப்பூசி போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். காயம் அடைந்தவர்களை சந்தித்து, சங்க-கரி தாசில்தார் வாசுகி, நகராட்சி கமிஷனர் சிவரஞ்சனி, தி.மு.க., நகர செயலர் முருகன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து வெறிநாயை பிடிக்க நகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.