தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீட் தேர்வில் 1,849 பேர் 'ஆப்சென்ட்'

நீட் தேர்வில் 1,849 பேர் 'ஆப்சென்ட்'

நீட் தேர்வில் 1,849 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : ஜூன் 22, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் மாவட்டத்தில் சேலம், இடைப்பாடி அரசு கல்லுாரிகள்; சேலம் அரசு மகளிர் கல்லுாரி; பொன்னம்மாபேட்டை ஐ.ஐ.ஹெச்.டி.,; அரசு சட்-டக்கல்லுாரி; வனவாசி அரசு பாலிடெக்னிக்; சவு-டேஸ்வரி கல்லுாரி; அரசு பள்ளிகள் உள்பட, 21 மையங்களில், நீட் மறு தேர்வு நேற்று நடந்தது. 5,760 மாணவியர், 3,408 மாணவர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 9,169 பேர் விண்-ணப்பித்திருந்தனர். அவர்களில், 4,549 மாண-வியர், 2,770 மாணவர், ஒரு மூன்றாம் பாலினத்-தவர் என, 7,320 பேர் தேர்வு எழுதினர். 1,211 மாணவியர், 638 மாணவர் என, 1,849 பேர் வர-வில்லை. மையங்களில் பலத்த போலீஸ் பாது-காப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக தேர்-வர்கள், கடும் சோதனைக்கு பின் உள்ளே அனும-திக்கப்பட்டனர்.

1,532 பேர் கண்காணிப்புசவுடேஸ்வரி கல்லுாரி மையத்தை ஆய்வு செய்த பின், கலெக்டர் இளம் பகவத் கூறியதாவது:

அனைத்து மையங்களில், தேர்வர்கள் எளிதாக சென்றுவர வழிகாட்டி பலகைகள், சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி-களுக்கு தேவையான சாய்வு தளம், சக்கர நாற்-காலி, குடிநீர், தடையின்றி மின்சாரம் என, தேர்-வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுளன. 21 மையங்களுக்கு, 2 ஒருங்கி-ணைப்பாளர், 2 துணை ஒருங்கிணைப்பாளர், 21 மைய மேற்பார்வையாளர், 21 துணை மேற்பார்-வையாளர், 26 பார்வையாளர் உள்பட, 1,532 பேர், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, எந்த முறைகேடு, புகார்களுக்கும் இடமின்றி, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us