/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1ல் படை வீரர் ஓய்வூதிய குறைதீர் முகாம்
/
1ல் படை வீரர் ஓய்வூதிய குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 21, 2025 12:49 AM
சேலம்,  சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்டத்தில் முப்படையை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய, 'ஸ்பர்ஷ் மொபைல் வேன்', ஜூலை, 1ல் சேலம் கலெக்டர் அலுவலகம் வருகிறது. அத்துடன் குறைகளை நிவர்த்தி செய்யும் அலுவலர்களும் வருகின்றனர்.
முகாம் காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும். முகாமுக்கு வரும் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர், படைப்பணி சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, பான், ஆதார் கார்டுகள், ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.இந்த வாய்ப்பை சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

