/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முனியப்பன் கோவிலில் 139ம் ஆண்டு திருவிழா
/
முனியப்பன் கோவிலில் 139ம் ஆண்டு திருவிழா
ADDED : ஜன 17, 2025 06:17 AM
சேலம்: சேலம், அஸ்தம்பட்டி மத்திய சிறை காவலர் குடியிருப்பில் உள்ள முனியப்பன் கோவிலில், 139ம் ஆண்டு திருவிழாவையொட்டி, கடந்த, 13ல் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று பொங்கல் வைபவம் நடந்தது. இதையொட்டி முனியப்பனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டது. சிறை போலீசாரின் குடும்பத்தினர், மக்கள் தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடனாக ஆடு கோழி பலியிட்டு வழிபட்டனர்.
பாத முனியப்பன்
காணும் பொங்கலையொட்டி, சேலம், உத்தமசோழபுரம் அருகே உள்ள பாத முனியப்பன் கோவிலில் நேற்று, ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல் சேலம், தளவாய்பட்டி ஏரிக்கரை எல்லை முனியப்பன் கோவிலில், பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
கொங்கணாபுரம் அருகே பனிக்கனுார் சூளை முனியப்பன் கோவிலில் பால், தயிர், திருநீறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள், ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம தேவதைகள், எல்லை முனியப்பன், குலதெய்வங்களுக்கு, கிடா வெட்டி வழிபட்டனர்.