ADDED : மார் 27, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2 பேருக்கு குண்டாஸ்
சேலம்:சேலம், களரம்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் என்ற அல்லேலுயா, 21. இவர் கடந்த மாதம், 27ல் களரம்பட்டி ஆலமரத்துக்காடு காளியம்மன் கோவில் பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால், போலீசார் கைது செய்து, 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் கொண்டலாம்பட்டியை சேர்ந்த கணேசன், கடந்த, 6ல், சேலம், ஆற்றோர மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால், டவுன் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.