ADDED : ஏப் 15, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: காபி கடை கேஷியரை தாக்கிய, இருவர் கைது செய்யப்பட்-டனர்.சேலம், அம்மாபேட்டை நல்லுசாமி தெருவை சேர்ந்தவர் கன-கராஜ், 65. இவர் லைன்மேட்டில் உள்ள காபி கடையில் கேஷிய-ராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த இருவர் சிகரெட் வாங்கியுள்ளனர்.
கனகராஜ் பணம் கேட்டதில், வாக்குவாதம் ஏற்பட்டு அருகில் கிடந்த செங்கற்களை எடுத்து, கனகராஜை தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனர்.கனகராஜ் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்னதா-னப்பட்டி கருவாட்டு மண்டி அஜீத்குமார், 29, ஸ்ரீ இளையகங்கை, 34 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.