ADDED : ஜன 20, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி, ஏரித்தோட்டம் காவிரி ஆற்று பகுதியில், அரசிராமணி குள்ளம்பட்டி நீர்வளத்துறை அலுவலக உதவி பொறியாளர் பவித்ரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, 2 டிராக்டர்களில், 2 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்து விசாரித்தபோது, அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிந்தது. விசாரணையில் ஏரித்தோட்டத்தை சேர்ந்த பெருமாள், 55, சின்னமணி, 36, என தெரிந்தது. இதுகுறித்து பவித்ரன் புகார்படி, தேவூர் போலீசார் நேற்று, பெருமாள், சின்னமணியை கைது செய்து, இரு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.