ADDED : ஆக 05, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
வீராணம் அருகே வீமனுார், சின்னனுாரை சேர்ந்தவர் தங்கராஜ், 51.
கந்தசாமி நகரில் உள்ள அம்சாரம்மன் வேடியப்பன் கோவிலில் பூசாரியாக
உள்ளார்.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவிலை திறந்தபோது,
அங்கிருந்த, 2 அடி உயர உண்டியல் உடைத்து காணிக்கை திருடப்பட்டது
தெரிந்தது. அங்குள்ள கேமரா காட்சிகளை பார்த்தபோது, 'ஸ்போர்ட்'
பைக்கில் வந்தவர்கள், உண்டியலை திருடுவது பதிவாகி இருந்தது.
தங்கராஜ் புகார்படி, வீராணம் போலீசார் விசாரித்து, பெரிய வீராணத்தை
சேர்ந்த அரவிந்த்குமார், 24, ஹரிஹரன், 23, ஆகியோரை கைது செய்தனர்.
