/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 2 பேர் கைது
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 2 பேர் கைது
ADDED : நவ 02, 2025 01:31 AM
ஆம்பூர், ஆம்பூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண், 52. இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, வாணியம்பாடி சென்றார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த ஒன்றரை பவுன் நகை திருட்டு போனது.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், 24, கார்த்தி, 23, ஆகிய இருவரும், அருண் வீட்டில் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

