/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிபாசிட் வாங்கி ரூ.15 லட்சம் மோசடிநிதி நிறுவனம் நடத்திய 2 பேர் கைது

ADDED : ஏப் 17, 2025 01:25 AM
சேலம்:ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த், 34. சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ், 34. இவர்கள் கடந்த ஆண்டு பள்ளப்பட்டியில், தனியார் நிதி நிறுவனம் நடத்தினர். 'நிதி நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை' என முகநுாலில் விளம்பரம் செய்தனர். இதைப்பார்த்து வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 9 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அவர்களிடம் டிபாசிட் தொகை செலுத்தும்படி, ஆனந்த், செல்வராஜ் கூறினர். அதை நம்பி அவர்கள், 15 லட்சம் ரூபாய் செலுத்தினர். ஆனால் வேலை வழங்கவில்லை. இதுகுறித்து, 6 மாதங்களுக்கு முன், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி விசாரித்து வந்த போலீசார், ஆனந்த், செல்வராஜை, நேற்று கைது செய்தனர்.