/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கஞ்சா விற்ற 2 பேர் குண்டாசில் கைது
/
கஞ்சா விற்ற 2 பேர் குண்டாசில் கைது
ADDED : ஜூலை 13, 2025 01:56 AM
கரூர் கரூர் மாவட்டம், வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி உள்ளிட்ட போலீசார், கடந்த ஜூன், 20 ல் வெங்கமேடு மயானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 2,100 கிராம் கஞ்சா வைத்து விற்பனை செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த மாண்டா மனோஜ், 25; ஜோகிந்தர், 24, ஆகிய இரண்டு பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மாண்டா மனோஜ், ஜோகிந்தர் ஆகிய இரண்டு பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார். திருச்சி மத்திய சிறையில் உள்ள மாண்டா மனோஜ், ஜோகிந்தர் ஆகியோரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை, வெங்கமேடு போலீசார் நேற்று வழங்கினர்.

