/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவரிடம் கத்தி முனையில் மொபைல் பறித்த 2 பேர் கைது
/
டிரைவரிடம் கத்தி முனையில் மொபைல் பறித்த 2 பேர் கைது
டிரைவரிடம் கத்தி முனையில் மொபைல் பறித்த 2 பேர் கைது
டிரைவரிடம் கத்தி முனையில் மொபைல் பறித்த 2 பேர் கைது
ADDED : நவ 04, 2025 01:50 AM
சேலம் சேலம் வீராணம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன், 20. ஜே.சி.பி. வாகன டிரைவரான இவர், குப்பனுார் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர், அவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி மொபைல்போன், 1,500 ரூபாயை பறித்து சென்றனர். இது குறித்து அளித்த புகார்படி, வீராணம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த பிரபு, 37, குள்ளம்பட்டியை சேர்ந்த இளவரசன், 30,  ஆகியோர் பிரவீனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், மொபைல் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், பணம், மொபைல்போனை
பறிமுதல் செய்தனர்.ஸ்டாலின் திட்ட முகாம் மனு மீது
நடவடிக்கை எடுக்க போர்க்கொடி
சேலம், நவ. 4
சேலம், தாரமங்கலம் செஞ் சிறகுகள் உதவும் சங்க தலைவர் தினேஷ் தலைமையில் இளைஞர்கள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, உங்களுடன் ஸ்டாலின் முகாம் எதற்காக நடத்தப்பட்டது; பதில் கொடுக்குமா மாவட்ட நிர்வாகம் என்று அச்சிடப்பட்ட பேனர் ஏந்தியபடி வந்ததால், பரபரப்பு உண்டானது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பேனரை பறிமுதல் செய்த பின், மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
அதன்பின் தினேஷ் கூறியதாவது:
தாரமங்கலம் நகராட்சி, 2வது வார்டு அம்பேத்கர் நகரில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்குள்ள ஆண்கள் கழிப்பறையில் இருந்து வெளிவரும் கழிவுநீர் செல்ல, போதிய கால்வாய் இல்லாததால், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தொற்றுநோய்க்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்து, 45 நாட்கள் கடந்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இனியும் காலம் கடத்தாமல், கழிவுநீர் அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

