/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மோட்டார், இரும்பு திருடிய 2 பேர் கைது
/
மோட்டார், இரும்பு திருடிய 2 பேர் கைது
ADDED : டிச 02, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கருப்பூர் மேட்டுப்பதியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 65. இவர் கல்மாவு அரைக்கும் மில் நடத்தி வருகிறார். கடந்த 29ல், ஆலையில் இருந்து மோட்டார், இரும்பு பட்டைகள், 262 கிலோ இரும்பு கம்பிகள் காணாமல் போனது.
இதையடுத்து சுப்ரமணியன் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கருப்பூர் மேட்டுப்பதி பகுதியை சேர்ந்த கைலாஷ், 19, உதயகுமார், 23, ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து மோட்டார், இரும்பு பட்டை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

