/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டா கத்தியுடன் ரகளை வீடியோவால் 2 பேர் கைது
/
பட்டா கத்தியுடன் ரகளை வீடியோவால் 2 பேர் கைது
ADDED : அக் 05, 2025 01:15 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி, நடுவலுார் ஊராட்சி, பள்ளக்காடு மற்றும் மோட்டூரை சேர்ந்த இளைஞர்கள் இடையே, சில நாட்களுக்கு முன் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது இருதரப்பினர் இடையே மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது.
அதில் ஒரு தரப்பை சேர்ந்த மணிகண்டனை, மற்றொரு தரப்பை சேர்ந்த மணிவண்ணன், 30, அவரது உறவினர் தினேஷ்குமார், 29, நேற்று முன்தினம், கெங்கவல்லியில் பார்த்து வாக்குவாதம் செய்தனர். அப்போது மணிவண்ணன், பட்டா கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
மக்கள் தட்டிக்கேட்க, 'நாங்கள், இந்த ஏரியா ரவுடி. யாரும் வந்தால் கொன்றுவிடுவேன்' என, மிரட்டியுள்ளார். இது
குறித்த வீடியோ பரவியதால், கெங்கவல்லி போலீசார், மணிவண்ணன், தினேஷ்குமார் மீது, மக்களுக்கு அச்சுறுத்தல், ஆயுதம் வைத்து ரகளை செய்தல் உள்பட, 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நேற்று அவர்களை கைது செய்தனர்.