/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.எஸ்.ஐ.,யை தாக்கிய 2 'குடி'மகன்கள் கைது
/
எஸ்.எஸ்.ஐ.,யை தாக்கிய 2 'குடி'மகன்கள் கைது
ADDED : மார் 24, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காடு, கீழ் அழகாபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 32, பிரவீன்குமார், 28. இருவரும் சேர்வராயன் கோவில் பகுதியில், நேற்று முன்தினம் மாலை மது அருந்தினர்.
அப்போது ரோந்து பணியில் இருந்த, ஏற்காடு எஸ்.எஸ்.ஐ., முருகன், 'பொது இடத்தில் மது அருந்துகிறீர்கள்' என கேட்டார். இதில் ஆத்திரமடைந்த இருவரும், வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளனர். காயம் அடைந்த முருகன், ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், சிலம்பரசன், பிரவீன்குமாரை, ஏற்காடு போலீசார் கைது செய்தனர்.