ADDED : அக் 30, 2026 01:10 AM
அ நிறம் | அளவு
சேலம்: ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சேலம், செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் - டவுன் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே தண்டவாள பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குப்பை கொட்டிய, செவ்வாய்பேட்டை, சீதாராமன் சாலையை சேர்ந்த மோகன், 60, அம்மாபேட்டையை சேர்ந்த ஓம்பிரகாஷ், 29, ஆகியோருக்கு, தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், ரயில்வே பகுதிகளில் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுப்பதோடு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
