ADDED : அக் 30, 2026 01:11 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை பணிமனை முன், தொ.மு.ச., போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
பொதுச்செயலர் மனோன் முன்னிலை வகித்தார்.அதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 20 சதவீத போனஸ் மற்றும் 10 சதவீத ஊக்கத்தொகை வழங்குதல்; வெற்றிப்பயணம் பஸ்சில் பணிபுரியும் தொழிலாளர்களின் தினப்படி வசூல் படியை உயர்த்தி வழங்குதல்; இயற்கை எய்திய தொழிலாளர்களின் பணப்படியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பொருளாளர் முருகன், மண்டல நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
