ADDED : அக் 01, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை வந்தது. அப்போது, ஈரோடு மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பெண்கள் பெட்டி கழிவறை அருகே, கேட்பாரின்றி பை ஒன்று கிடந்தது.
சோதனை செய்த போது அதில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு, ரூ.20 ஆயிரம். யாரும் பைக்கு உரிமை கோரவில்லை. ஈரோடு மதுவிலக்கு போலீசார் கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.